ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்றார் ஐஸ்வரி தோமர்!

Aishwary Tomar

கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற 15வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 22 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இறுதிப் போட்டியில் 463.5 புள்ளிகளை எடுத்து தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் தியான் ஜியாமிங் 462.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீரர் டு லின்ஷு 450.3 புள்ளிகளுடன் வெண்கலம் பதக்கமும் வென்றனர். ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தகுதிச் சுற்றில் 591 ரன்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். தோமர், ஸ்வப்னில் குசலே மற்றும் அகில் ஷியோரன் ஆகிய இந்தியர் மூவரும் சீனாவை (1777) பின்னுக்குத் தள்ளி 1764 ரன்களுடன் அணி வெள்ளி வென்றனர்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி – இந்திய அணி 4வது அசத்தல் வெற்றி!

மேலும், குசலே மற்றும் ஷியோரன் மூலம் இந்த நிகழ்வில் இந்தியா ஏற்கனவே அதிகபட்சமாக இரண்டு ஒலிம்பிக் கோட்டா இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது பாரிஸ் கேம்ஸ் ஒதுக்கீட்டை குசலே வென்றிருந்தார்.

இந்த ஆண்டு பாகுவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஷியோரன் அதையே செய்தார். இதனிடையே, தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்