ஆசிய விளையாட்டு: இந்தியா வரலாற்று சாதனை… மகளிர் கபடி, வில்வித்தை, மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம்!

asia game india

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று மட்டும் இதுவரை 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் வென்றது இந்தியா. அதன்படி, ஆசிய விளையாட்டில் வில் வித்தை ஆடவர் தனி நபர் பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

அதில், மகளிர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா. இதே பிரிவில் வெண்கலம் வென்றார் அதிதி. இதுபோன்று, ஆடவர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் இந்திய வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தியோதாலே தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளியும் வென்றனர். இதனை தொடர்ந்து மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.

மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றது. இது நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

எனவே, ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்கள் பெற்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 100 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்ததில் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு வலுவகுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்