ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.
டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை பயிற்சியாளர் ஆனார்.
குத்துச்சண்டையில் இவரது பங்களிப்பு காரணமாக நாட்டின் சிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கினர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. கொரோனாவிலிருந்து குணமடைந்த இவர் கல்லீரல் புற்றுநோய் காரணத்தால், இன்று காலை மணிப்பூரிலுள்ள செக்தா கிராமத்தில் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய வயது 42.
இவரது மறைவால் விளையாட்டுத்துறையில் உள்ள பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தந்து, மேரி கோம், விஜேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டின் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் டிங்கோ சிங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், டிங்கோ சிங் விளையாட்டில் சூப்பர் ஸ்டார். இவர் குத்துசண்டை விளையாட்டில் சிறந்த வீரராகவும், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தவும் பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். இவரது மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. இவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…