19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு சீனாவில் நடைபெற்று வருகிறது. சீனாவில் ஹாங்சோவ் நகரில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கின்றனர்.
இதில், இந்தியா சார்பாக 655 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று குதிரை ஏற்றத்தில் தங்கம் வென்றது போல, இன்று துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று தனிநபர் இறுதி போட்டி சுற்றுக்கும் வீரர்கள் முன்னேறியுள்ளனர்.
25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த மனு பார்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் அடங்கிய துப்பாக்கி சுடுதல் அணி 1759 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுளள்து. அதில், மனு பார்கர், ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேபோல முன்னதாக 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவை சேர்ந்த ஷிப்ட் சாம்ரா, ஆஷி சௌக்சே, மன்னி கௌசிக் ஆகியோர் அடங்கிய அணி 1764 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன் மூலம் 4 தங்கம் , 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கம் என மொத்தமாக 16 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
வேலூர் : கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் காட்பாடி பகுதியில் பெண் மருத்துவர் தனது ஆண் நம்பருடன்…
சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு…
சென்னை : சிவாஜி நடிப்பில் 1952ம் ஆண்டு வெளியான "பராசக்தி" திரைப்படம், 72 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
டெல்லி : நாளை (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13 வரையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில்…
புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி…