Asian Games 2023: மகளிர் ஹாக்கி போட்டி.! இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று அசத்தல்.!

Hockey

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியின் பல பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று வெண்கலப் பதக்கக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதியது. அதன்படி, முதல் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பெனால்டி கோல் அடிக்க, ஜப்பானின் யூரி நாகாய் இரண்டாவது காலிறுதியின் இறுதி நேரத்தில் அதனை சமன் செய்தார்.

நான்காவது காலிறுதியில் ஸ்கோர்கள் சமநிலையில் இருந்த நிலையில், இந்தியாவின் சுசீலா சானு புக்ரம்பம் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து சவிதா புனியா தலைமையிலான இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இது ஹாங்சோவில் இந்தியா பெற்ற 104வது பதக்கமும், 41வது வெண்கலமும் ஆகும். கடந்த வியாழக்கிழமை நடந்த மகளிர் ஹாக்கி அரையிறுதியில், சீனாவுக்கு எதிராக 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த பதக்கத்தை வென்றுள்ளது. தற்போது வரை இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 104 பதக்கங்களுடன், பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்