ஆசிய விளையாட்டு 2023: 8 தங்கத்துடன் பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா!

india medals

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களைப் பெற்று, பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முத்திரையைப் பதித்து, குறிப்பிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கி நாட்டிற்கு இதுவரை மொத்தம் 32 பதக்கங்களை வென்று விளையாடி, தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.  இருப்பினும், சீனா 95 தங்கம், 55 வெள்ளி, 27 வெண்கலம் என இதுவரை மொத்தம் 177 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதுபோன்று, கொரியா 24 தங்கம், 24 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 89 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், ஜப்பான் 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்தியா உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: இந்திய தங்கப் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்: 

  • துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார், ருத்ராங்க்ஷ் பாட்டீல் மற்றும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகிய 3 பேரும் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
  • துப்பாக்கி சுடுதல் போட்டி: ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் டீம் பிரிவில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கம் வென்றனர்.
  • துப்பாக்கி சுடுதல்: சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
  • துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர்.
  • துப்பாக்கி சுடுதல்: ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசேலே மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2023 இல் 1769 என்ற உலக சாதனை மதிப்பெண்களுடன் இந்தியாவின் 5வது துப்பாக்கிச் சுடுதல் தங்கத்தை உறுதி செய்தனர்.
  • துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பாலக் குலியா தங்கம் வென்றுள்ளார்.
  • கிரிக்கெட்: ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது.
  • குதிரையேற்றம்: 41 வருட காத்திருப்புக்குப் பிறகு, அனுஷ் அகர்வாலா, ஹிருதய் விபுல் சேடா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யகிருதி சிங் ஆகியோர் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தனர்.

இதனிடையே, கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்