Asian Games 2023: 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார் ஆன்டிம் பங்கள்.!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டி 12 வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பாக 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கான 53 கிலோ மல்யுத்த பிரிவில் இந்தியா வீராங்கனை கிராப்லர் ஆன்டிம் பங்கல், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் பொலோர்டுயா பேட் ஓச்சிரை எதிர்கொண்டார்.
ஆன்டிம் கடுமையாக போராடி பேட்-ஓச்சிரை3-1 என்ற கணக்கில் தோற்கடித்து முதலிடம் பிடித்தார். இதனால் ஆன்டிம் பங்கல் இந்தியா சார்பாக வெண்கலப் பதக்கத்தை வென்றார். 19 வயதான ஆன்டிம் பங்கல் இன்று முன்னதாக நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காலிறுதியில் ஜப்பானின் இறுதிச் சாம்பியனான அகாரி புஜினாமியிடம் தோல்வியடைந்தார்.
இதற்கிடையில், கடந்த மாதம் செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்தை ஆன்டிம் பங்கால் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானின் லேலோகோன் சோபிரோவா, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய வீராங்கனை மான்சி அஹ்லாவத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனால் இந்தியா 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தமாக 86 பதக்கங்களை வென்றுள்ளது. இதன்மூலம் பதக்கபட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இதேபோல சீனா 178 தங்கம், 99 வெள்ளி, 55 வெண்கலம் என 322 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.