சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் பதக்கபட்டியலில் இந்தியாவின் தங்கம் 16 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதியது. இந்தியா சார்பாக வில்வித்தை வீரர்களான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜஸ் டியோடலே ஆகியோர் கலந்துகொண்டனர். கொரியா சார்பாக சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடி விளையாடியது.
இதில் இந்திய வீரர்கள் 2வது சுற்றைத் தவிர மற்ற அனைத்திலும் புள்ளிகள் எடுத்தனர். ஆனால் கொரிய வீரர்கள் 3 சுற்றுகளில் 39 புள்ளிகளும், 1 சுற்றில் மட்டும் 38 புள்ளியும் எடுத்தது. இதனால், ஜோதி மற்றும் ஓஜஸ் டியோடலே ஜோடி 159 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. கொரியாவின் சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடி 158 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாம் இடம் பிடித்தது.
இதனால் இந்திய வில்வித்தை அணி தங்கம் வென்றது. கொரியா வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இது ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது வில்வித்தை தங்கப் பதக்கம் ஆகும். இந்த போட்டியைத் தொடர்ந்து, அக்டோபர் 7ம் தேதி காலை 6:30 மணி முதல் தங்கப் பதக்கத்திற்கான தனிப்பட்ட ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கும்.
இந்த நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 71 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 164 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலம் என 300 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…