Asian Games 2023: 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்.! இந்தியாவின் ஹர்மிலன் வெள்ளி வென்று அசத்தல்.!
இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பலப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பாக பெயின்ஸ் ஹர்மிலன் கலந்து கொண்டு, 2:03.75 நிமிடங்களில் இலக்கை அடைந்தார். இதனால் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதே போல இலங்கையின் திஸ்ஸநாயக முடியான்செலகே தருஷி 2:03.20 நிமிடங்களில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் வாங் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார். பெயின்ஸ் ஹர்மிலன் இதற்கு முன்னதாக நடந்த 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற நிலையில், தற்போது 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றுள்ளார். இதே போல கிரேக்க ரோமன் 87 கிலோ மல்யுத்தம் பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இவர் ஈரானின் நாசர் அலிசாதேவுக்கு எதிராக 5.1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இதனால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடிய இதுவரை விளையாடிய போட்டிகளில் மொத்தமாக 77 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 16 தங்கம், 29 வெள்ளி, 32 வெண்கலம் என வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல சீனா 167 தங்கம், 92 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தமாக 310 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.