ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி – சென்னையில் நாளை தொடக்கம்!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷணன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியானது ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
தொடக்க நாளில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியாவை ஜப்பான் எதிர்கொள்கிறது. இந்திய ஹாக்கி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமானது ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளை சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுவரை மொத்தம் நடைபெற்றுள்ள 6 சீசன்களில் இந்திய அணி மூன்று முறை டைட்டிலை வென்றுள்ளது.