ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி..! தமிழக வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை..!
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்திய பவானிதேவி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்த நிலையில், வெண்கலம் பதக்கம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி, சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது.