#AsiaCupHockey2022: ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!

Default Image

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா.

இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடித்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

சூப்பர் 4 போல் அட்டவணையில் கொரியாவும் மலேசியாவும் கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்ததால், இறுதிப் போட்டிக்கு இந்தியா வெற்றி பெற வேண்டும். ஆனால், கொரியாவுக்கு எதிரான ஆட்டம் ட்ரைவில் முடிந்ததால், இறுதி போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இதனால் இந்தியா இன்று வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்ட நிலையில், 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இதனிடையே, இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்