கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற அஸ்வினி – தனிஷா ஜோடி!

Ashwini - Tanisha

கடந்த ஒரு வாரமாக கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், உலகின் 28ம் நிலை ஜோடியான அஸ்வினி – தனிஷா 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில், உலகின் 81ம் நிலை அணியான சீன தைபேவின் சங் ஷுவோ யுன் – யு சியென் ஹுய் ஜோடியை வீழ்த்தி 40 நிமிஷங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற தனிஷா-அஸ்வினி ஜோடிக்கு ரூ.6½ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.  நடப்பாண்டில் இந்தியாவின் அஸ்வினி – தனிஷா கூட்டணி வென்ற 3வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இதற்கு முன் அபுதாபி மாஸ்டா்ஸ், நான்டெஸ் சா்வதேச சேலஞ்சா் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது கவுகாத்தி மாஸ்டர்ஸ் பட்டத்தையும் தட்டி சென்றனர். இதுபோன்று, கவுகாத்தி மாஸ்டர்ஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீராங்கனை லாலின்ரேட் சாய்வானும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசியா வீரர் யோஹனஸ் சாட் மார்செலினோவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்