இன்றைய போட்டியில் உலக சாதனையை படைப்பாரா அஸ்வின்..!எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!
தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்க இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 395 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியது.நேற்றைய நான்காம் நாள் ஆட்டமுடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்து உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தால். முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்வார். இதுவரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை பறித்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரன் உடன் பகிர்ந்து கொள்வார்.
முரளிதரன் இந்த சாதனையை 66 டெஸ்ட் போட்டிகளில் படைத்தார். அஸ்வின் தற்போது 66 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.