இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான ரஹீம் ஸ்டெர்லிங் இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் நுழைந்த நிலையில் பிரான்சுக்கு எதிரான காலிறுதிபோட்டிக்கி திரும்புவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், ஞாயிற்றுக்கிழமை செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பியிருந்தார்.இப்போட்டியில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஸ்டெர்லிங்,குடும்பத்தினர் வீட்டிலிருந்த போது ஆயுதமேந்திய கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. சனிக்கிழமை பிரான்சுக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்கான நேரத்தில் அவர் திரும்புவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
ஸ்டெர்லிங் பிரான்சுக்கு எதிரான காலிறுதிக்கு திரும்புவாரா அல்லது அரையிறுதிக்கு திரும்புவாரா என்று கேட்டபோது, கரேத் சவுத்கேட் அவர் உறுதியாக தெரியவில்லை என்று சின்ஹுவா தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் இந்நேரத்தில் அவர் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை,அதனால் அவரை எந்த அழுத்தத்திற்கும் உட்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
“நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நேரத்தில், தெளிவாக அவர் தனது குடும்பத்துடன் இருப்பதே முதன்மையானது. நாங்கள் அதற்கு ஆதரவளிக்கப் போகிறோம், மேலும் அவருக்குத் தேவையான நேரத்தை அவருக்கு விட்டுவிடுவோம் என்று கூறியுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…