பிரக்ஞானந்தா, இளவேனில் உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அர்ஜுனா விருது வென்ற 25 பேரின் பட்டியலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
தேசிய விளையாட்டு விருதுகள் 2022 க்கான வீரர்கள் பட்டியலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு என பல விருதுகளை வழங்கிவருகிறது. இந்த விருதுகள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களில் கையால் நவம்பர் 30 இல் வழங்கப்படுகிறது.
இதில் அர்ஜுனா விருது 25பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த 25 பேரில் 2 குத்துச்சண்டை வீரர்கள், 2 பேட்மின்டன் வீரர்கள், 2 செஸ் வீரர்கள், 2 மல்யுத்த வீரர்கள், 2 துப்பாக்கிசுடும் வீரர்கள், பளு தூக்கும் விகாஸ் மற்றும் கபடி வீரரான சாக்ஷி குமாரி ஆகியோரும் அடங்குவர். தமிழகத்தைச்சேர்ந்த துப்பாக்கிசுடும் வீராங்கனை இளவேனில் வலறிவன் மற்றும் செஸ் வீரரான பிரக்ஞானந்தா வும் இந்த அர்ஜுனா விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வென்றவர்களின் பெயர் மற்றும் விளையாட்டுத்துறை விவரம் இதோ; https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?utm_campaign=fullarticle&utm_medium=referral&PRID=1875896&utm_source=inshorts