துப்பாக்கி வீராங்கனை இளவேனில் பெயர் அர்ஜினா விருதுக்கு பரிந்துரை…

கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தங்க மங்கை இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதலில் சாதனை புரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இரண்டு முறை இளையோர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதேபோல், பிரேசிலின் ரீயோடி ஜெனேரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் பங்கேற்ற இளவேனில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக சீனியர் பிரிவில் சாதனை படைத்த வீராங்கனை என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். அவரது சாதனைகளை சுட்டிக்காட்டி இளவேனில் வாலறிவனுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கக் கோரி தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025