ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!
உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது.
அங்கு , உலக கால்பந்தாட்ட சாம்பியன்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டு அவர்களை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர். மேளதாளங்கள் முழங்க ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவே வீரர்கள் தலைநகர் வீதியில் வலம் வருகின்றனர்.