Copa America 2024 [file image]
கோப்பா அமெரிக்கா : கடந்த ஜூன்-21 ம் தேதி தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டியானது இன்று (ஜூலை-15) புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதியது.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த இறுதி போட்டியில் தொடக்கத்தில் 36”வது நொடிகளில் அர்ஜென்டினா அணியின் வீரரான அல்வாரெஸ்ஸுக்கு அறிய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது கோலாக அமையாது. மேற்கொண்டு விளையாடிய 2 அணிகளுக்கும் அவ்வப்போது கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிடுவார்கள்.
அதன் பின் முதல் பாதி முடிவடையும் போது இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் 0-0 என இருப்பார்கள். அதனை தொடர்ந்து தொடங்கிய இரண்டாம் பாதியானது தொடங்கியது. அப்போது போட்டியின் 64’வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கால் இடறி கீழே விழுவார்.
இதன் காரணமாக அவரால் போட்டி தொடர முடியாத காரணத்தால், அவருக்கு பதிலாக நிகோ கோன்சலஸை களமிறக்குவார்கள். ஒரு இறுதி போட்டியில் நட்சத்திர வீரருக்கு இப்படி நேர்ந்ததை கண்டு அர்ஜென்டினா வீரர்கள் உட்பட ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தும் நிர்ணயித்த 90’நிமிடங்களில் ஒரு கோலை கூட அடிக்க முடியாமல் திணறினார்கள்.
இதனால் கூடுதல் அரை மணி நேரம் போட்டியானது நடத்தப்பட்டது. அதிலும் முதல் 15’நிமிடத்தில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியாது. மேலும், அடுத்ததாக நடைபெற்ற 2-ஆம் 15’நிமிடத்தில் சரியாக 112’வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரரான லாட்டாரோ மார்டினெஸ் மிரட்டலான கோலை அடிப்பார். இதனால், 1-0 என அர்ஜென்டினா அணி முன்னிலை பெறுவார்கள்.
மீதம் இருந்த 8′ நிமிடத்தில் அட்டகாசமாக டிஃபென்ஸ் செய்து ஆட்ட நேர முடிவில் திரில்லாக 1-0 என கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டியை வெற்றி பெற்று சாம்பியனானது அர்ஜென்டினா அணி. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்கா தொடர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கிறது அர்ஜென்டினா.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…