பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா.!

Argentina

ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த போட்டி, சிறிது நேரத்தில் அர்ஜென்டினா அணி பந்தைக் கைப்பற்றியது.

கண்ணீருடன் கேப்டன் ரோஹித்.. தோல்விக்கு பிறகு பேசியது என்ன?

அர்ஜெண்டினா கோல் அதிக முயற்சி செய்தும் அதனை பிரேசில் தடுத்து வந்தது. இதனால் முதல் பாதி சமமான ஸ்கோருடன் முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் ஆரம்பத்திலேயே பிரேசில் அணிக்கு சாதகமாக போட்டி தொடங்கியது. முதல் சில நிமிடங்கள் கோலை அடிக்க முயற்சி செய்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா அணிக்கு கார்னர் கிக் மூலம் கோல் அடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இதை பயன்படுத்தி 63 வது நிமிடத்தில் நிக்கோலஸ் ஓட்டமெண்டி, கார்னர் கிக்கில் பறந்து வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்..!

இறுதியில் முழு நேரம் முடியும் வேளையிலும், பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் அணிக்கு எதிராக அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் சொந்த மண்ணில் பிரேசில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்