அரை இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா ..! பெனால்டியில் த்ரில் வெற்றி..!

Argentina vs Ecuador

கோப்பா அமெரிக்கா : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து, இன்று அடுத்த சுற்றான கால் இறுதி சுற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியாக அர்ஜென்டினா அணியும், எக்குவடோர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் அரை மணி நேரம் சற்று இரண்டு பக்கமும் கடுமையாக சென்றது.

அதன்பின் போட்டியின் 35′ வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரரான லிசாண்ட்ரோ மார்டினெஸ் தன் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். அதன்பிறகு எக்குவடோர் அணி முதல் பாதியின் மீதம் இருந்த 15 நிமிடங்களும் கடுமையாக போராடியும் ஒரு கோலை கூட அடிக்க முடியாமல் திணறினார்கள்.

இதனால், முதல் பாதி முடிவடைந்த போது 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து இரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக தொடங்கியது. இந்த நிலையில் இரண்டாம் பாதி முழுவதும் பல கோல்களை எக்குவடோர் அணி முயற்சி செய்தும் அது முடியாமலே போனது. 

பின் போட்டியின் 90 நிமிடங்கள் முடிந்தும், 5 நிமிடம் கூடுதலாக அளிக்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 90+1 நிமிடத்தில் எக்குவடோர் அணியின் ரோட்ரிக்ஸ் அசத்தலாக கோலை அடித்து 1-1 என சமன் செய்தார். இதன் மூலம் போட்டி மேற்கொண்டு 120 நிமிடங்கள் நடைபெற்றது. அதிலும் எந்த ஒரு அணியும் முன்னிலை கோலை அடிக்கவில்லை.

இதனால் போட்டி பெனால்டிக்கு சென்றது, அதில் முதல் பெனால்டியை அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி தவறவிட்டார். அதே நேரம் எக்குவடோர் அணியும் தவறவிட்டது. பின் விறுவிறுப்பாக சென்ற பெனால்டியில் 4-2 என கோல்  முன்னிலையில் போட்டியை வென்று அசத்தியது அர்ஜென்டினா அணி. இதன் மூலம் தோல்வியே பெறாமல் அர்ஜென்டினா அணி கோப்பா அமெரிக்கா தொடரில் நீடித்து வருகிறது. மேலும் , இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump
VIRART INJURY
TN Assembly - M K Stalin
US tariffs