ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?
பெங்களூர் அணி நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுவரை லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட மொத்தமாக 8 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என பெங்களூர் ரசிகர்கள் கூறுவது போல அணி நிர்வாகம் நடைபெற்று வரும் மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அப்படி இதுவரை எந்தெந்த வீரர்களை பெங்களூர் அணி எவ்வளவு கோடிக்கு எடுத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
பெங்களூர் 2025 ஏலத்தில் எடுத்த வீரர்கள்
- லியாம் லிவிங்ஸ்டோன் – ரூ.8.75 கோடி
- ஃபில் சால்ட் – ரூ.11.50 கோடி
- ஜிதேஷ் சர்மா – ரூ.11 கோடி
- ஜோஷ் ஹேசில்வுட் – ரூ 12.5 கோடி
- ரசிக் தர் – ரூ.6 கோடி
- சுயாஷ் சர்மா – ரூ 2.6 கோடி
- க்ருணால் பாண்டியா – ரூ 5.75 கோடி
- புவனேஷ்வர் குமார் – ரூ 10.75 கோடி
ஏலத்திற்கு முன்பு பெங்களூர் தக்க வைத்த வீரர்கள் : விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகிய மூன்று வீரர்களை தக்க வைத்திருந்தது. ஏற்கனவே, 3 வீரர்கள் தக்க வைத்த நிலையில், 8 வீரர்களை ஏலத்தில் பெங்களூர் எடுத்துள்ளதால் மொத்தம் 11 வீரர்கள் அணிக்கு சேர்ந்துவிட்டார்கள்.
இந்த வீரர்கள் தான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூர் லெவன்ஸாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏனென்றால் ஏலத்திற்கு செலவு செய்ய வைத்திருந்த பணத்தை வைத்து முக்கியமான வீரர்களை ஏற்கனவே பெங்களூர் எடுத்துவிட்டது.
எனவே, இனிமேல் மீதம் இருக்கும் தொகையை வைத்து இன்னும் சில வீரர்களை அவர்கள் பேக்- அப்காக வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் அணிக்கு கேப்டன் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதே சமயம் அணியில் க்ருணால் பாண்டியா இருப்பதால் அவரும் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கேப்டன் யார் என்ற அறிவிப்பும் வரும். இன்னும் ஏலம் முடியவில்லை என்பதால் இன்னும் யாரையெல்லாம் அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..