வில்வித்தை உலகக்கோப்பை போட்டி : வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா குமாரி!
சீன வீராங்கனையான ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி.

ட்லாக்ஸ்காலா : இந்த ஆண்டிற்கான, வில்வித்தை உலகக்கோப்பைத் தொடரானது மெக்சிகோவில் உள்ள ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்று வந்தது. இதில், நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் தீபிகா குமார். இந்த நிலையில், இறுதி போட்டியில் சீனாவின் லி ஜியாமனும் எதிர்த்து விளையாடினார். இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த லி ஜியாமன் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமரியை வீழ்த்தி தங்கம் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இந்த தோல்வியால் இரண்டாம் இடம் பிடித்து, 5-வது முறையாக இந்த வில்வித்தை உலகக்கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னதாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 4 வெள்ளி பதக்கமும் மற்றும் 1 வெண்கல பதக்கமும் வென்றறிகிறார் தீபிகா குமாரி.
இவரை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடிய சீன வீராங்கனை லி ஜியாமன் தனது முதல் முயற்சியிலேயே வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025