அனுஷ்கா ஷர்மா-விராட்கோலி தம்பதியின் மகள் வாமிகாவிற்கு 6 மாத பிறந்தநாள் கொண்டாட்டம்..!
அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி தம்பதியின் மகள் வாமிகாவின் ஆறு மாதங்கள் நிறைவை கொண்டாடியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி மும்பையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயர் வாமிகா.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு 6 மாதங்கள் நிறைவானதை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் அனுஷ்கா பதிவேற்றியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அவளின் ஒரு புன்னகை போதும் எங்கள் உலகம் முழுவதையும் மாற்றிவிடும். மேலும், விராட்கோலி தனது மகளை அணைத்த படி இருந்த புகைப்படத்தை பெருமளவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram