2 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்பேக் கொடுத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.. முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது!
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இங்கிலாந்து எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இங்கிலாந்துக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம்பிடித்தது முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
‘நான் அவசரப்படவில்லை…’ தனது ஓய்வு குறித்து மனம் திறந்தார் ஸ்டீவ் ஸ்மித்!
இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் நீண்ட காலத்திற்கு பின் அணிக்கு திரும்பினார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய 14.4 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
அப்போது, ரோவ்மன் பாவெல் – ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால், 18.1 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக, 22 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஆண்ட்ரே ரஸ்ஸல், பவுலிங்கில் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதுபோன்று, ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் இங்கிலாந்து அணியை பதற வைத்த ரஸ்ஸல், நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ரே ரஸ்ஸல் மாஸான காம்பேக் கொடுத்துள்ளார்.