டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய சக்கரங்களுடன் கூடிய காரை பரிசளித்ததற்காக நன்றி ஆனந்த்மஹிந்திரா,மிக விரைவில் காரை வெளியே எடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”,என்று குறிப்பிட்டுள்ளார். காரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஈட்டி எறிந்த தூரமான 87.58 மீ பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக,2020 கோடைகால பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான சுமித் ஆண்டிலுக்கு முதல் XUV700 காரை மஹிந்திரா சமீபத்தில் பரிசளித்தது.
புதிய XUV700 ஈட்டி எறிதல் பதிப்பு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது மற்றும் சிறப்பு வண்ணப்பூச்சுகளை கொண்டுள்ளது. காரின் முன்பக்க செங்குத்து கிரில் ஸ்லேட்டுகள், பின்புற டீக்கால்கள் மற்றும் மஹிந்திரா பிராண்ட் லோகோ ஆகியவை தங்க நிறத்தில் உள்ளன. உட்புறத்தில், காரில் கோல்டன் ட்ரீட்மென்ட் உள்ளது.எனினும்,வாகனத்தின் மீதமுள்ள இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மாறாமல் உள்ளன.
இதற்கிடையில்,மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் XUV700 SUV அறிமுகமானதில் இருந்து ஏற்கனவே 65,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு SUV இன் டெலிவரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன, மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் குறைந்தது 14,000 XUV700களை டெலிவரி செய்ய வாகன உற்பத்தியாளர் இலக்கு வைத்துள்ளார். எஸ்யூவியின் விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.22 .89 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…