சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !
Chess : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன இந்தியரும், தமிழருமான பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்ற வருடம் அறிவித்தது போல எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார்.
Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி
உலகில் செஸ் விளையாடும் செஸ் வீரர் பட்டியலில் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்செனை எதிர்த்து இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா விளையாடினார். மேக்னஸுக்கு ஈடு கொடுத்து நன்றாக விளையாடிய அவர் இறுதியில் தோல்வியடைந்தார். இதன் மூலம், உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை சென்ற முதல் இளம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.
Read More :- IPL 2024 : முதல் 2 போட்டியில் SKY இல்லை ..? சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணிக்கு அடுத்த இடி !
உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்ற பிரக்ஞானந்தாவிற்கு, 1 கோடிக்கும் அதிகமான X பயனர்கள் மஹிந்திராவின் தார் காரை பரிசாக அளிக்க ஆனந்த் மஹிந்திராவிற்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், அப்போதே ஆனந்த் மஹிந்திரா ‘நான் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு, மஹிந்திரா XUV 400 காரை பரிசாக அளிக்க போகிறேன்’ என அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
Read More :- ICC T20 World Cup 2024 : ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ?
தற்போது, அவர் கூறியது போல XUV 400 என்ற எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார். அதன் பின், பிரக்யானந்தா, “நான் காரை பெற்றேன். எனது பெற்றோர்கள் மிகவும் சநதோஷம் அடைந்துள்ளனர். ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி ” என அதற்கு நன்றி தெரிவித்து அவரது X தளத்தில் நன்றி கூறி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதனால், தொழிலாளிதிபரும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Received XUV 400 , My Parents are very happy ???? Thank you very much @anandmahindra sir???? https://t.co/5ZmogCLGF4 pic.twitter.com/zmwMP2Ltza
— Praggnanandhaa (@rpraggnachess) March 12, 2024