மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது.
இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் மைதானத்தின் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும்அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இவரின் நடனதிற்கு இந்திய வீரர் அஸ்வின் ,ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…