மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்தி கொண்ட ரசிகர்.! அதன் பிறகு நடந்ததை கேளுங்க…
கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் பெயரை தனது நெற்றியில் பச்சைக்குத்தி கொண்ட தீவிர ரசிகர் ஒருவர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து மெஸ்ஸியின் ரசிகர்கள் அவருக்கு தங்கள் அன்பை பல்வேறு விதமாக வெளிக்காட்டி வருகின்றனர்.
அப்படி ஒரு ரசிகர் மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்தி கொண்டு தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். கொலம்பியவை சேர்ந்த ஜாம்ப்ஸ் எனும் ரசிகர் தனது நெற்றியில் மெஸ்ஸியின் பெயரை பச்சை குத்தி கொண்டார்.
பச்சை குத்திய தொடக்கத்தில் அதனை அவர் ஆதரித்து இருந்தார். ஆனால், அதன் பிறகு, சமீபத்திய ஒரு வீடியோவில் பேசிய ஜம்ப்ஸ், ‘ நான் இந்த விஷயத்திற்கு (பச்சை குத்தியதற்கு) வருந்துகிறேன். இது நிறைய எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுத்துவிட்டது. எனது தனிப்பட்ட வாழ்வில் எதிர்வினைகளை ஏற்படுத்தி விட்டது.’ என வருத்தத்துடன் பதிவிட்டார் மெஸ்ஸின் பெயரை பச்சை குத்திக்கொண்டு வெறித்தனமான ரசிகர்.