இறுதிப்போட்டிக்கு சென்று வரலாறு படைத்தார்..!அமித் பன்ஹால்..!
ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் , பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை உடன் மோதினார்.
இப்போட்டி முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் போட்டியில் கஜகஸ்தானை சார்ந்த சகென் பிபோஸ்சினோ வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.இதன் மூலம் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.