முதல் முறையாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கேப்டனாக நியமனம்..!

Default Image

ராஞ்சி கோப்பை தொடர் போட்டி வருகின்ற 09-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் மொத்தமாக 38 அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த தொடரில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது.

இந்த தொடருக்கான முதல் இரண்டு லீக் போட்டிகளுக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உட்பட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் இந்திய அணி , நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.அதனால் அஸ்வினுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை.

தமிழக அணி:

விஜய் ஷங்கர் (கேப்டன்), அஸ்வின், தினேஷ் கார்த்திக் , முரளி விஜய், பாபா அபராஜித், முருகன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் , கே.முகுந்த், அபினவ் முகுந்த், டி.நடராஜன், சாய் கிஷோர், ஷாருக் கான், மணிமாறன் சித்தார்த், அபிஷேக் தன்வார், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்