"திருமணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கம் தான்" – தோனி..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திருமண தகவல் மையம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது திருமண வாழ்க்கையை பற்றி பேசிய தோனி , நானும் , சாக்ஷியும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.
திருமண செய்த நாளில் இருந்து அவருக்கு ஏற்ற கணவராக தான் நடந்து கொள்கிறேன். திருமணத்திற்கு பிறகு வீட்டின் நிர்வாகத்தை அவர்தான் பார்த்து கொள்கிறார். எனவே அவர் சந்தோஷமாக இருந்ததான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
அவர் செய்யும் செயல்களுக்கு ,விஷயங்களுக்கு நான் ஆம் ,சரி என கூறினால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்.திருமணத்திற்கு முன் அணைத்து ஆண்களும் சிங்கம் போன்று தான் இருப்பார்கள்.அதன் பிறகு எல்லாம் மாறிவிடும்.
“ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள்” தோனியின் பகீர் பதில்..!
50 வயதை கடந்த பிறகு உண்மையான திருமண பந்தத்தை உணரமுடியும். 55 வயதை தொடும்போது அது காதலின் உண்மையான வயது என சொல்வேன் என்று கூறினார்.மேலும் நேற்று மும்பை வந்த தோனியிடம் செய்தியாளர்கள் வருங்காலம் குறித்து கேட்டனர்.அதற்கு “ஜனவரி மாதம் வரை எண்னிடம் ஏதும் கேட்காதீர்கள்” என கூறினார்.