என்னா வேகம் டா இது..! அக்தரின் அசுர வேகத்தை தகர்த்து உலகசாதனை படைத்த பதிரானா.!
- ஞாயிற்றுக்கிழமை ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது.
- இப்போட்டியில் இலங்கை வீரர் பதிரானா பந்தை 175 கி.மீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகவேகத்தில் வீசப்பட்ட பந்தாக அது அமைந்தது.
தற்போது தென்ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம்16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகளை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது.இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 297 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர் பதிரானா இந்திய அணி பேட்டிங் செய்த போது 4-வது ஓவரை வீசினார். அவரது பந்தை இந்திய வீரர் யாஷவி ஜெயிஸ்வால் எதிர்கொண்டார். அப்போது பதிரானா பந்தை 175 கி.மீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகவேகத்தில் வீசப்பட்ட பந்தாக அது அமைந்தது.
இதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் வீசினார். அதுவே இதுவரை சர்வதேச போட்டியில் வேகமாக வீசப்பட்ட பந்தாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பதிரானா தகர்த்துள்ளார்.