கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 3வது இடத்தை பிடித்தது.

AjithkumarRacing

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் ரேஸில் “911 GT3 R” என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது.

இதனையடுத்து, அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதை பார்க்கும்போது “நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்ற MOMENT தான் ஞாபகம் வருகிறது என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

வெற்றி வாகைச் சூடிய அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். துபாயில் தேசிய கொடியோடு கொண்டாடியது இந்தியாவுக்கும் பெருமையாக இருக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்