பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அஃப்ரிடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து தொகுப்பாளினி “நீங்கள் எப்போதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா” என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த அஃப்ரிடி என் மனைவியால் ஒருமுறை டிவியை உடைத்து இருக்கிறேன் என கூறினார். அது ஏனென்றால் ஸ்டார் பிளஸ் சேனல் வெளியாகும் சீரியல்களை இங்கு உள்ள பலர் பார்ப்பதுண்டு அவர்களில் எனது மனைவியும் ஒருவர்.
அதில் வெளியாகும் சீரியலை என் மனைவிடம் தனியாக பார்க்குமாறு கூறினேன். இந்த சீரியலில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று அவரிடம் பலமுறை கூறி இருந்தேன்.ஆனால் அவர் அதை மீறி குழந்தையையும் ஈடுபடுத்தி உள்ளார்.
இதனால் எங்கள் மகள் அந்த சீரியலில் ஆரத்தி காட்டுவது போல சில பாவனை செய்தாள் அதனால் கோபமடைந்து தொலைக்காட்சியை உடைத்து விட்டேன் என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…