கைவிட்ட கொல்கத்தா! வெங்கடேஷ் ஐயரை குறி வைக்கும் 5 அணிகள்!
ஐபிஎல் 2025 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடத் தக்க வைக்கவில்லை. சிறப்பாக விளையாடியபோதும் அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் என்ன அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போடும். அப்படி 5 அணிகள் இந்தமுறை அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணி இளம் வீரர்களைக் கூறி வைத்து ஏலத்தில் தூங்குவதில் சிறந்த அணி என்றே சொல்லலாம். எனவே, வெங்கடேஷ் ஐயர் போல ஒரு வீரர் நம்மளுடைய அணியிலிருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் கையில் ஏலத்திற்கான தொகை அதிகமாக வைத்து இருப்பதால் பெரிய பெரிய வீரர்களுக்குத் தூண்டில் போட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் இப்போது வெங்கடேஷ் ஐயரைப் பெரிய தொகை செலவானாலும் அவரை ஏலத்தில் எடுக்கவேண்டும் என்ற திட்டத்தில் பஞ்சாப் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் அணி ரஷீத் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் ஆகியோரை தக்க வைத்துள்ளது. அவர்களுக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். எனவே, இந்த முறை நம்மளுடைய அணியில் வெங்கடேஷ் ஐயர் இருந்தால் இடது கை பேட்டிங் வரிசை இன்னுமே வலுவாக இருக்கும் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ அணி நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தக்க வைத்துள்ளது. எனவே, மிடில் ஆர்டரில் ஒரு தரமான பேட்ஸ்மேன் இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி தன்னை தக்க வைக்காதது குறித்து ஏற்கனவே, எமோஷனலாக வெங்கடேஷ் ஐயர் பேசியிருந்தார். அவர் பேசியிருந்தது அணி நிர்வாகத்தின் காதில் விழுந்ததோ இல்லையோ திடீரென அவரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அணி ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.