ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால். இவர் சிறுவயதில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மும்பைக்கு வந்தபின், வசிக்க வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். அங்கு ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை கண்டு ஏக்கம் அடைந்த இவர், புகழ் பெற்ற சச்சின் டெண்டுல்கர் போல் ஆக வேண்டும், என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டார். ஆனால் இருவருடன் இருந்ததோ வறுமை மட்டும்தான்.
அப்போது இடைவிடா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட இவர் மைதானத்தில் அங்குள்ள முகாமில் தங்கியிருந்தார். மழைக்காலத்த்தில் வெள்ளத்தின் அடைக்கலமாக முகாம்களும் மாறும் எனவும், கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடமாகவும் இருக்கும் என கூறுகிறார் ஜெய்ஸ்வால். பின்னர் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அங்கு தன்னுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் பலரும் பானி பூரி சாப்பிட வரும் போது வறுமையின் கொடுமையை உணர்ந்ததாக கூறுகிறார்.
ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது, இவரின் பயிற்சியாளரும், காப்பாளருமான ஜ்வாலா சிங் என்பவர், கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு அனைத்து செலவுகளையும் ஏற்று அவரது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்நிலையில், விடாமுயற்சியும் அயராத உழைப்பும், மேற்கொண்ட ஜெய்ஸ்வால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட மும்பை அணியில் இடம் பிடித்தார். பின்னர் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி மிரளவைத்தார்.
இதன்மூலம் முதல்தர போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் U19 உலககோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்-2020க்கான ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ.2 கோடியே 40 லட்சதுக்கு ஏலமெடுத்தது. பிறந்ததிலிருந்து வறுமை மட்டுமே அறிந்திருந்த இவர், தற்போது அவரது கையில் கோடிகளில் ஆரம்பித்துள்ளது. மேலும், ஐபிஎல் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டபோது, தனக்கு வாழ்க்கை அளித்த பயிற்சியாளருக்கு ஒட்டு மொத்த பணத்தையும் தரப் போவதாக தெரிவித்திருந்தார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…