இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியை இரு அணிகளும் முதல் முறையாக விளையாட உள்ளனர்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் டெஸ்ட் போட்டிகளில் யாரும் அதிகம் செலுத்தவில்லை என கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டது. மாற்றங்களைக் கொண்டு வந்து டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களை இருக்கலாம் என நினைத்தனர். இதுதொடர்பாக 2009 -ம் ஆண்டு ஐசிசி பொதுமேலாளர் டேவிட் ரிச்சர்ட்சன் டெஸ்ட் போட்டிகளை ஐசிசி பகலிரவு போட்டியாக நடத்த தயாராக உள்ளது என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு முன் சிவப்பு நிற பந்துகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஏனென்றால் பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது மின்னொளியில் சிவப்பு நிற பந்துகள் சரியாக பார்க்க முடியாது எனவே ஆரஞ்சு , மஞ்சள் மற்றும் பிங்க் பந்துகள் பயன்படுத்த பயன்படுத்த திட்டமிட்டனர்.
மேலும் 80 ஓவர்கள் வரை தாங்கும் வெள்ளை பந்து வைத்து விளையாட திட்டமிடப்பட்டது. இதற்கும் சில வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் டெஸ்ட் போட்டியை சிவப்பு பந்து வைத்து தான் விளையாட வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டு சோதனைக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது .
அதன்பிறகு வெஸ்ட்இண்டீஸ் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் மைதானத்தில் முதல் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா , நியூசிலாந்து அணியும் மோதியது.
இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு அங்குள்ள மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது. அதில் 81 சதவீத மக்கள் பகலிரவு போட்டியை ஆதரித்தனர். அதன்பிறகு அடிலெய்ட் மைதானத்தில் ஐந்து பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி பகலில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் அப்போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை இந்திய அணி தரப்பில் பகலிரவு போட்டியாக இருந்த விளையாட மாட்டோம் என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த பிங்க் நிற பந்துகள் சூரியன் மறையும் நேரத்தில் அதிகமாக ஸ்விங் என கூறுகின்றனர். ஆனால் இதுவரை விளையாடிய 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.ஒரு போட்டி கூட டிராவில் முடியவில்லை. இந்நிலையில் தான் இந்திய அணி இன்று முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு குக்குபரா மற்றும் டியூக் நிறுவனத்தின் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த போட்டிக்கு முதல் முறையாக எஸ்.ஜி நிறுவனத்தின் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு மற்றும் பிங்க் பந்துக்கு இடையே ஒரே ஒரு வித்தியாசம் பிங்க் பந்து கருப்பு நூலால்இனைக்கப்பட்டு இருக்கும் . சிவப்பு பந்து வெள்ளைநூலால்இனைக்கப்பட்டு இருக்கும். இந்த பந்தின் மீது கூடுதலாக அரக்கு பூசப்படுவதால் பளபளப்பு அதிகரிக்கும். ஈரப்பதம் ஒட்டாது. இதனால் பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என பெரும்பாலான வீரர்கள் கூறுகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…