ஆண்டு தோறும் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில். இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை அணியை தோனி தான் கேப்டனாக வழி நடத்தவுள்ளார். இருந்தாலும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கள் முடிந்த பிறகு ஓய்வு பெற்றுவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து!
எனவே , இந்த முறையும் அவர் சென்னை அணிக்காக கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் காத்துள்ளனர். ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தோனியும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறார். அவர் தீவிரமாக பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனி விரைவில் பயிற்சியை தொடங்குவார் எனவும் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். அதன்படி, ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தோனி அதற்குள் தன்னுடைய பயிற்சியை தொடங்கி இருக்கிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…