ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் செய்துகொண்ட வீடியோக்களை வெளியீட்டு வந்தார். அவருடைய வீடியோவும் அந்த சமயம் மிகவும் வைரலாகவும் செய்தது.
அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது அவர் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சிட்னி தண்டர்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் எஸ்சிஜி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.
அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய காரணம் என்னவென்றால், ஹண்டர் பள்ளத்தாக்கில் வார்னருடைய சகோதிரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் சென்று இருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு நேரடியாக ஹெலிகாப்டரில் போட்டிக்கும் வந்து இருக்கிறார்.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…