வெஸ்ட் இண்டீஸ் எதிரான டி20 தொடர் அட்டவணையில் திடீர் மாற்றம் ..!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் டி20 போட்டிக்கான தொடர் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிசம்பர் 06-ம் தேதி முதல் போட்டி மும்பையிலும் , டிசம்பர் 8-ம் தேதி இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்திலும் , டிசம்பர் 11-ம் தேதி மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடக்க இருந்தது.
தற்போது முதல் டி20 போட்டி மும்பைக்குப் பதிலாக ஹைதராபாத்திலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திற்கு பதிலாக மும்பையிலும் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி அறிவித்தபடியே திருவனந்தபுரத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.எனவே மும்பையில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான சூழல் இல்லை. உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மும்பை போலீசார் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025