நல்ல பெயர் சொன்னால் பரிசு நிச்சியம்.! கோரிக்கை வைத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்.!
- பாகிஸ்தாயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, ஏற்கனவே உள்ள 4 பெண் குழந்தைகளுடன், தனக்கு புதிதாக 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் கடவுளின் ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி பேட்டிங், மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய இவர், பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி, 11000க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார். மேலும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அப்ரிடி மற்றும் அவரது மனைவி நடியாவுக்கும் ஏற்கனவே அக்ஷா, அன்சா, அஜ்வா, அஸ்மாரா என 4 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவருக்கு ஐந்தாவதாக மீணடும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
The Almighty’s infinite blessings & mercy are upon me…already having been granted 4 wonderful daughters I have now been blessed with a 5th, Alhamdulillah. Sharing this good news with my well-wishers… #FourbecomeFive pic.twitter.com/Yb4ikjghGC
— Shahid Afridi (@SAfridiOfficial) February 14, 2020
This one’s for my fans ????:
As you can see there’s a trend of my daughter’s names beginning with the letter ‘A’ ☺. Send me your recommendations for our new arrival with ‘A’….the winning name I select gets a prize! Keep the names rolling! #Aqsa#Ansha#Ajwa#Asmara#A….— Shahid Afridi (@SAfridiOfficial) February 15, 2020
இதுகுறித்த அப்ரிடி, அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது 4 பெண் குழந்தைகளுடன், தனக்கு புதிதாக 5வது பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் கடவுளின் ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது. இதை எனது நல்ல விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் ஒரு டிவிட்டை பதிவிட்டார். அதில் ஏற்கெனவே எனக்கு முதல் 4 மகள்களுக்கு ஏ (A) எழுத்தில் ஆரம்பிக்கும் வகையில் பெயர் வைத்தது போல இந்த குழந்தைக்கும் பெயர் வைக்க விரும்புவதாகவும், ஆதலால் நல்ல பெயரை தெரிவிப்போருக்கு பரிசு வழங்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இணையத்தில் பல பெயர்களை அவருக்கு முன்மொழிந்து வருகின்றனர்.