சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலையில் இருக்க வெற்றியைத் தீர்மானிக்கும் இரண்டாவது கோலை போர்ட்டோ அணிக்காக மவுசா மரேகா 60-வது நிமிடத்தில் அடித்தார். தன்னை இழிவுபடுத்திய ரசிகர்களை நோக்கி தன் தோல் நிறத்தை மரேகா சுட்டிகாட்டியதாக தெரிகிறது.
இதனை கண்டித்து அவருக்கு மஞ்சள் கார்டை நடுவர் காண்பிக்க மற்றொரு பக்கம் மவுசா மரேகாவின் செயலால் மேலும் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை விட்டு மைதானத்தில் இருந்த இருக்கைகளையும் எடுத்து களத்தில் வீசினர். இதுபோன்ற நிகழ்வால் ஆத்திரமடைந்த மவுசா களத்தைவிட்டு வெளியேறினார். பின்னர் சகவீரர்களும், பயிற்சியாளாரும் அவரை சமாதானம் செய்ய முயன்ற போதும் முடியவில்லை. இதனால் களத்தில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்பு அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களமிறங்கியதும் ஆட்டம் தொடங்கி போர்ட்டோ அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சம்பவத்தை குறித்து கால்பாந்தட்டத்துக்கு இது நல்லதல்ல என ரசிகர்களும், முன்னாள் கால்பந்து வீரர்கள் பலரும் தங்கள் ஆதரவை மவுசா மரேகாவுக்கு இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…