நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கால்பந்து வீரர்.! இதோ வீடியோ.!

- சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார்.
சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலையில் இருக்க வெற்றியைத் தீர்மானிக்கும் இரண்டாவது கோலை போர்ட்டோ அணிக்காக மவுசா மரேகா 60-வது நிமிடத்தில் அடித்தார். தன்னை இழிவுபடுத்திய ரசிகர்களை நோக்கி தன் தோல் நிறத்தை மரேகா சுட்டிகாட்டியதாக தெரிகிறது.
Moussa Marega incident for those that haven’t seen it, 100% within his rights to want to leave the field. FC Porto, Sérgio and the Liga need to stand by him and make sure that this incident goes punished.
( ???? courtesy of @vsports_pt) pic.twitter.com/rMWxs28UFW
— Próxima Jornada (@ProximaJornada1) February 16, 2020
இதனை கண்டித்து அவருக்கு மஞ்சள் கார்டை நடுவர் காண்பிக்க மற்றொரு பக்கம் மவுசா மரேகாவின் செயலால் மேலும் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை விட்டு மைதானத்தில் இருந்த இருக்கைகளையும் எடுத்து களத்தில் வீசினர். இதுபோன்ற நிகழ்வால் ஆத்திரமடைந்த மவுசா களத்தைவிட்டு வெளியேறினார். பின்னர் சகவீரர்களும், பயிற்சியாளாரும் அவரை சமாதானம் செய்ய முயன்ற போதும் முடியவில்லை. இதனால் களத்தில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்பு அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களமிறங்கியதும் ஆட்டம் தொடங்கி போர்ட்டோ அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சம்பவத்தை குறித்து கால்பாந்தட்டத்துக்கு இது நல்லதல்ல என ரசிகர்களும், முன்னாள் கால்பந்து வீரர்கள் பலரும் தங்கள் ஆதரவை மவுசா மரேகாவுக்கு இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024