800 கோல்கள்; கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய மைல்கல்.!
பனாமாவுக்கு எதிராக லியோனல் மெஸ்ஸி, அடித்த அபாரமான ஃப்ரீ-கிக் மூலம் 800 கோல்கள் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த டிசம்பரில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா முதன்முறையாக பனாமாவுக்கு எதிரான நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமயிலான அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வெற்றி பெற்றது. அல்மடா தனது முதல் சர்வதேச கோலுடன் அர்ஜென்டினாவின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
ஆட்டத்தின் 2-வது பாதியில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை, மெஸ்ஸி அற்புதமாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். மெஸ்ஸி அடித்த இந்த கோல் மூலம் அவர் தனது 800 வது கோலை கால்பந்து வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் கால்பந்து உலகில் 800 கோல் அடித்த வீரர்களில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
இதற்கு முன் போர்ச்சுகல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 830 கோல்கள் அடித்து முதல் வீரராக இந்த சாதனை படைத்திருந்தார். தற்போது மெஸ்ஸி 800 கோல்களை எட்டிய இரண்டாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Messi’s 800th career goal comes as a free kick in his first game with Argentina as World Cup champions.
Perfect.
(via @TV_Publica)pic.twitter.com/sWSREGPOBZ
— B/R Football (@brfootball) March 24, 2023