கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 27 வருடம் கழித்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் உலகக்கோப்பை போது தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த இலங்கை பேட்டிங் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் அந்த போட்டியின் தொடக்க பேட்ஸ்மேன் உபுல் தரங்கா ஆகியோரின் அறிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோரிடம் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் 8 மணித்திற்கு மேலாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
இவர்களிடம் விசாரணை நடத்தும்போது விளையாட்டு அமைச்சக அலுவலகத்தின் வெளியே, சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…