கேலோ இந்தியா: தமிழகத்துக்கு ஒரே நாளில் 8 தங்கம்.!

Published by
கெளதம்

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்து, மகளிருக்கான 200 மற்றும் 800மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஆடவருக்கான 200 மற்றும் 400மீ ஓட்டப்பந்தயம், ட்ரிபிள் ஜம்ப் ஆகிய போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

தற்போது, பதக்கபட்டியலில் மகாராஷ்டிரா 26 தங்க பதக்கத்தையும், 23 வெள்ளிப் பதக்கங்களையும், 40  வெண்கலம் பதக்கம் என மொத்தம் 79 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

கேலோ இந்தியா: கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி தங்கம்!

அடுத்தபடியாக, தமிழ்நாடு 25 தங்கம், 12 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 21 தங்கம், 12 வெள்ளி 29 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் ஹரியானா 3ஆவது இடத்தில் உள்ளது.

Recent Posts

ரேஸ்-க்கு முன் அஜித் சார் என்னிடம் சொன்ன அந்த விஷயம்… பட்டியலிட்ட இயக்குநர் மகிழ் திருமேனி!

சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…

2 hours ago

“அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை” – வருண் சக்கரவர்த்தி!

சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…

3 hours ago

நாளை சேப்பாக்கத்தில் டி20 போட்டி – ரசிகர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.!

சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…

3 hours ago

விஜய்யின் கடைசி படம்… குடியரசு தினத்தன்று வெளியாகிறது ‘தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

4 hours ago

“அச்சம் கொள்ள வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதல்வர் உதயநிதி!

சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…

5 hours ago

துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.!

சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…

5 hours ago