6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.. சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் டென்னிஸ் வீரர்!
இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலை.
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி சிறையில் இருந்த நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலையானார். இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலையான போரிஸ் பெக்கர் (வயது 55) சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பெக்கர் இதற்கு முன்பு 2002 இல் ஜெர்மனியில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2017 ஆம் ஆண்டு திவாலானதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சொத்துக்களை மறைத்ததற்காக போரிஸ் பெக்கருக்கு லண்டன் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதாவது, £2.5 மில்லியன் ($3.1 மில்லியன்) சொத்துக்கள் மற்றும் கடன்களை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, திவால் விதிகளை மீறியதற்காக இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் டென்னிஸ் சூப்பர்ஸ்டார் பெக்கர்.