ஆசிய லெவன் போட்டியில் இந்திய வீரர்கள் 5 பேர் தேர்வு.! பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை.!
- வங்காளதேசத்தில் மார்ச் மாதம் உலக லெவன்-ஆசிய லெவன் அணிகள் மோதும் 20 போட்டிகளை நடத்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
- இதில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்காளதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா வருகின்ற மார்ச் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உலக லெவன்-ஆசிய லெவன் அணிகள் மோதும் 20 போட்டிகளை நடத்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
வங்கதேச அணி சார்பில் நடத்தப்படும் ஆசிய லெவன் அணியில் விளையாட தோனி ,பும்ரா மற்றும் கோலி உள்ளிட்ட வீரர்களை விளையாட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வீரர்கள் இணைந்து விளையாடுவார்கள் என ரசிகர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஆசிய போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆசிய லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள் விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அப்போது பிஎஸ்எல் தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆசிய லெவன் அணி வீரர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த போட்டி நடைபெறும் போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளனர். அதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இதில் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து உண்மையான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.