மராத்தான் வீரர் வில்சன் கிப்சாங்கிற்கு 4 ஆண்டு தடை.!

Default Image

கென்யாவின் முன்னாள் மராத்தான் வில்சன் கிப்சாங்கிற்கு ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்து விபத்தின் போலி புகைப்படத்தைப் பயன்படுத்திய போன்ற காரணங்களுக்காக நான்கு ஆண்டு தடை.

கடந்த 2012 -ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் கிப்சாங். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு  தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு பிரிவிற்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. மேலும், சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார்.

கடந்த 2019 மே 17 அன்று சோதனைக்கு அழைத்த போது விபத்து நடந்தாக கூறி காரணமாக சோதனைக்கு வரவில்லை,  விபத்துக்குள்ளான புகைப்படத்தை ஊக்கமருந்து எதிர்ப்பு பிரிவிற்கு அனுப்பி உள்ளார். ஆனால், அந்த புகைப்படம் ஆகஸ்ட் 19, 2019 அன்று ஏற்பட்ட விபத்தில் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோல 4 முறையும் தவறான தகவல் கொடுத்துள்ளார்.

கடந்த 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்